2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பொது இடத்தில் பாலியல் உறவு: காதல் ஜோடி நெருக்கடியில்

Kogilavani   / 2014 ஜூலை 06 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொது இடமொன்றில் பாலியல் உறவில் ஈடுபட்ட காதல் ஜோடியொன்றை கைதுசெய்யுமாறு ரஷ்யாவின் அரசியல்வாதியொருவர் ரஷ்ய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ரஷ்யாவின் சமர நகரில் உள்ள வரலாற்று புகழ்பெற்ற நீரூற்று ஒன்றின்மீது வைத்து காதல் ஜோடியொன்று பட்டப்பகலில் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளது.

அவ்வழியாக சென்ற அலெக்சே டோஹோவ் என்ற 26 வயது இளைஞன் வீடியோவாக அதனை பதிவு சமூக ஊடகமொன்றில் அக்காட்சியை பதிவேற்றம் செய்துள்ளான்.

15 நிமிடங்களைக் கொண்ட இந்த வீடீயோக் காட்சியில் மேற்படி ஜோடி பாலியல் உறவில் ஈடுபடுவது போன்றும் பின்னர் ஆடைகளை சரிசெய்துகொண்டு சத்திமிட்டு இருவரும் சிரித்தவாறு வீதியில் நடப்பதுபோன்றும் காட்சிகள் காணப்படுகின்றன.

'நேரம் சரியாக 11 மணியாக இருந்தது. அவர்கள் 15 நிமிடங்கள் அந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும். இவர்களை ஒருவரும் எதும் செய்யவில்லை' என மேற்படி இளைஞன் தெரிவித்துள்ளான்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்துகொண்ட உள்ளூர் அரசியல்வாதி உடனயாக அக் காதல் ஜோடியை கைதுசெய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதுடன் இவ்வீடியோ காட்சியானது வரலாற்று புகழ்வாய்ந்த இந்நகரத்தின் பெயரை வீணடிக்கக்கூடும் எனவும்   தெரிவித்துள்ளார்.

'மேற்படி இருவரும் கைதுசெய்யப்படுவார்களாயின் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடடிவக்கை எடுக்கப்படும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .