2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஒராங்குட்டானுக்காய் வாழும் பெண்

Kogilavani   / 2014 ஜூன் 25 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


பெண்ணொருவர் காட்டில் வாழும் ஒராங்குட்டான்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். முன்னால் பெண் தொழிலதிபரான லிசா (வயது 45) என்ற பெண்ணே இவ்வாறு ஒராங்குட்டான்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.

இவர் ஒராங்குட்டான்களுக்கான பாடசாலையொன்றில் தொண்டராக தற்போது பணிபுரிந்து வருகின்றார்.இந்தோனேஷியாவின் போர்னியோ என்ற பகுதியில் ஒராங்குட்டான்களுக்கான  பாடசாலையொன்று அமைக்கப்பட்டுள்ளது.அப்பாடசாலையிலே இவர் தொண்டராக பணியாற்றி வருகின்றார்.

குறித்த பெண், ஏற்கெனவே வாலில்லா குரங்குகளுக்கான புனர்வாழ்வு நிலையமொன்றில் பணியாற்றியுள்ளதனால், குரங்குகளை வளர்பதற்கான நல்ல அனுபவங்களை பெற்றுகொண்டுள்ளார்.
 
ஒராங்குட்டான்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகானதாகவும் காட்டில் வாழும் குரங்கு இனங்களிலேயே உறுதியான உடலமைப்புடன் வளரக்கூடியவை.

இவை குறித்த பாடசாலையில் வளர்க்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டதன் பின்னர் காட்டிலேயே சுதந்திரமாக கொண்டு போய் விடப்படுகின்றன.

சிறிய ஒராங்குட்டான்கள் நாளாந்தம் காட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு மரம் விட்டு மரம் தாவுவதற்கும் அவை தங்கியிருப்பதற்கான கூடுகளை அமைப்பதற்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்று குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

மேலும் மனிதர்களின் இயல்புகளை கொண்ட இப்பிராணிகளுடன்  இங்கு தொண்டராக பணியாற்றுவதனால் தான் மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .