2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கூந்தலுக்கு மெழுகுவர்த்தி சிகிச்சை

Kanagaraj   / 2014 ஜூன் 18 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


கூந்தல் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக பிரேசில் நாட்டைச் சேரந்த மொடல் அழகியொருவர் தனது தலை முடியை மெழுகுவர்த்தி சுவாலையால் பொசுக்கியுள்ளார்.

பார்பரா பயில்ஹோ என்ற பெண்ணே இவ்வாறானதொரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இவர் பெற்றுக்கொண்டுள்ள சிகிச்சையை வெலடரெபியா என்று அழைக்கின்றார்கள்.

இச்சிகிச்சையானது மெழுகுவர்த்தி மற்றும் சில இரசாயன பதார்த்தங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறிதளவு தலைமுடியை எடுத்து விரல்களினால் சுருட்டிப்பிடித்து குறித்த இரசாயன கலலையை அதன்மீது பூசிய பின்னர் மெழுகுவரத்தி சுவாலையின் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது.

மெழுகுவர்த்தி சுவாலையானது முடியின் உட்புறத்துக்கு ஊடுறுவி செல்லாமல் இருப்பதற்காகவே குறித்த இரசாயன பசை பூசப்படுகின்றது.

இச்சிகிச்சையின் மூலம் தலைமுடியில் உள்ள சிதைவடைந்த முடிகள் வளர்ச்சியடைவதுடன் வளமாக வளரக்ககூடியதாக இருக்கும் என்பதினாலேயே இவ்வாறானதொரு சிகிச்சையை செய்யப்படுகின்றது என்று இச்சிகிச்சையை செய்யும் அழகு கலை நிபுணர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த பெண்  தெரிவிக்கையில்,

இச்சிகிச்சையினை செய்வதற்கு சுமார் 3 மணித்தியாளங்கள் எடுத்தது. மெழுகுவர்த்தி சிகிச்சை முடிவடைந்தவுடன், கண்டிஷனர் சிகிச்சை செய்யப்பட்டது. முடி உளர்ந்த பின்பு எனது தலை முடி மிகவும் பட்டுப்போன்ற மென்மையானதாக காணப்பட்டது.

நான் எனது தலைமுடியை ஸ்ரேட்னிங் செய்திருந்தால் நிறைய முடிகள் உதிர்ந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது பிரேசில் போன்ற பல நாடுகளில் உள்ள பெண்கள் இச்சிகிச்சையை செய்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .