2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

காட்போட் படகு போட்டி

Kogilavani   / 2014 ஜூன் 17 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


பரீட்சை முடிந்ததை கொண்டாடும் வகையில் அமெரிக்காவின் கேம்பிரீஜ் பல்கலைக்கழக மாணவர்கள் காட்போட் பெட்டிகள் மற்றும் செலோ டேப்புகளை பயன்படுத்தி செய்த வள்ளங்களில் படகோட்டப்போட்டிகளை நடத்தி அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பியுள்ளனர்.

நாட்டின் அதிசிறந்த புத்திசாலிகளாக கேம்பிரஜ் மாணவர்கள் காணப்பட்டாலும் இவர்களது விளையாட்டு குணம் விட்டுப்போகவில்லை. இவர்களது படகு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

இத்தினத்தை அவர்கள்  தற்கொரை தினம் என்று பெயரிட்டுள்ளனர்.

இப்போட்டியின் சில படகுகளுக்கு மாத்திரமே போட்டியின் இறுதி வரை பயணிக்கக்கூடியதாக இருந்தது. அதிகமானோரின் படகுகள்  அரைமைல் தூரத்திலேயே மூழ்கிவிட்டன.

இப்போட்டியில் மூன்று ஆண்களை கொண்ட அணியே வெற்றிக் கிரீடத்தை சுவீகரித்துகொண்டனர்.

இந்த படகை தயார் செய்வதற்கு ஐந்து நாட்கள் எடுத்தது. கடைசிவரை போகும் என்ற நம்பிக்கை எமக்கிருந்தது, ஆனால் வெற்றியாளராகுவோம என்று எதிர்பார்க்கவில்லை என்று வெற்றி பெற்ற அணியில் ஒருவர் தெரிவித்துள்ளார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .