2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பச்சை நிறத்தில் நாய்க்குட்டிகள்

Kogilavani   / 2014 ஜூன் 17 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாயொன்று பச்சை நிறத்திலான குட்டிகளை ஈன்று பலரது கவனத்தை ஈர்த்த சம்பவமொன்று ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.

ஸ்பெயினின் வலாடேலட் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐயீட வெலலாட மோலினா என்ற பெண், வளர்த்து வந்த நாயே இவ்வாறு பச்சை நிறத்திலான நாய்க்குட்டிகளை ஈன்றுள்ளது.

மேற்படி பெண் தனது நாய் பச்சை நிறத்திலான குட்டிகளை ஈன்றதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  குட்டிகள் அழுக்கு நிறைந்ததாக காணப்படுவதாக நினைத்து அப்பெண் அவற்றை சுத்தம் செய்துள்ளார். ஆனாலும் அவற்றின் பச்சை நிறம் மாறவில்லை. பின்னரே அவை இயற்கையாக பச்சை நிறத்தில் பிறந்துள்ளன என்பதை உணர்ந்துள்ளார்.

இதனை என்னால் நம்ப முடியவில்லை. குட்டிகள் அழுக்கானவை என நினைத்தேன். அவற்றை சுத்தம் செய்தேன். ஆனால், அவற்றின் நிறம் மாறவில்லை என அப்பெண் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பச்சை நிறத்துடன் பிறந்த இரண்டு குட்டிகளுமே உடல் பலவீனமாகவே காணப்பட்டன. அவற்றில் பெண் குட்டி பிறந்து ஓர் இரு மணித்தியாலத்தில் இறந்து விட்டது. ஆண் குட்டியானது ஒருவாரத்தின் பின் அதனது நிறத்தை இழக்கத் தொடங்கியுள்ளது எனவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

ஸ்பெனிஷில் இவ்வாறான சம்பவம் இதுவரை இடம்பெற்றதில்லை என மேற்படி கிராமவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .