2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மாணவிகளின் சீருடைகளை திருடி அணிந்த நபர்

Kogilavani   / 2014 ஜூன் 17 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


நபரொருவர் பாடசாலை மாணவிகள் 600 பேரின் சீருடைகளை திருடியதுடன் அவற்றை தனது வீட்டில் சேகரித்து வைத்த நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.

ஜப்பானின் மிஹாமா பகுதியில் உள்ள கொய்ச்சி ஹிரோசி என்ற 53 வயது நபரே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இளையவர்களுக்கான தொழில்நுட்பக் கல்லூரியொன்றில் மேற்படி நபர் பணியாற்றி வருகின்றார்.

இவர், 12 பிராந்தியங்களிலுள்ள 50 பாடசாலைகளில் கல்வி கற்று வரும் மாணவிகளின் ஆடைகளையே இவ்வாறு திருடியுள்ளார்.

இவ் ஆடைகளில்  மாணவிகள் உடற்பயிற்சி கூடத்திறகு அணியும் ஆடைகள், போட்டிகளை உற்சாகப்படுத்துவதற்காக அணியும் ஆடைகள், கரப்பந்தாட்டத்தின்போது அணியும் அடைகளென மூன்று வகையான ஆடைகள் காணப்பட்டுள்ளன.

மொத்தமாக அவர் 600 ஆடைகளை தனது வீட்டில் சேகரித்து வைத்திருந்துள்ளார். திருடிய ஆடைகளை வீட்டிலிருக்கும்போது அவர் அணிந்து பார்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வருட கோடைக்காலத்தின்போது இவ்வாறு மாணவிகள் அணியும் ஆடைகளை திருடுவதற்கு ஆரம்பித்தேன்.அவ் ஆடைகளை நான் அணிந்துப்பார்த்தேன் என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .