2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

முதலை முட்டைகளினால் ஐஸ்கிரீம்

Kogilavani   / 2014 ஜூன் 17 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


முதலைகளின் முட்டைகளை கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கும் செயற்திட்டமொன்றை பிலிப்பைன்ஸில் உள்ள உணவகமொன்று முன்னெடுத்துள்ளது. இதற்காக முதலை முட்டைகளை கொள்வனவு செய்வதற்கான அறிவித்தலொன்றையும் அவ் உணவகம் விடுத்துள்ளது.

பிலிப்பைன்ஸ், டாவோ நகரில் ஸ்வீட் ஸ்பொன் என்ற உணவகத்திலே இவ்வாறு முதலை முட்டையில் ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகின்றது.

இந்த ஐஸகிரீமை தயாரிப்பதற்கு முதலை இறைச்சி மட்டும் பயன்படுத்தபடுவதில்லை. அதனால், விலங்குகளின் மீது கரிசனை கொண்டவர்கள் கவலைப்பட தேவையில்லை என உணவகத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனை தயாரிப்பதற்கு முதலை முட்டையுடன் கோழி முட்டையும் ஏனைய வழமையான பொருட்களான பால், சீனி மற்றும் மா என்பன பயன்படுத்தப்படுகின்றன.

மேற்படி உணவகமானது இந்த ஐஸ்கிரீமை தயாரிப்பதற்கு தேவையான முதலை முட்டைகளை உணவகத்திற்கு அருகிலுள்ள மிருகக்காட்சி சாலையொன்றிலிருந்து பெற்றுகொள்கின்றது.

உண்மையில் இது வழயைமான ஐஸ்கிரீமை போன்று காணப்படும். இது முதலை இறைச்சியை போன்று இருக்காது. நாங்கள் இதற்கு முதலையின் முட்டையை மட்டுமே பயன்படுத்துகின்றறோம். ஆனால், இந்த ஐஸ்கிரீமானது மிகுந்த சுவைமிக்கதாக காணப்படும் என மேற்படி உணவகத்தின் உரிமையாளராக டினோ தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .