2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பிள்ளைகளுடன் தாய் தற்கொலை

Kogilavani   / 2014 ஜூன் 17 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


பெண்ணொருவர் தொடர்மாடிக் குடியிருப்பின் ஜன்னல் வழியாக தனது 3 பிள்ளைகளையும் தூக்கியெறிந்து கொலைசெய்ததுடன் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.

கியாகோ கொசு என்ற 35 வயதுடைய பெண்ணும் அவரது 7, 2 வயது மகன்மாரும் 6 வயது மகளுமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

அவ் வழியை கடந்து சென்ற பாதசாரிகள் இரத்த வெள்ளம் தோய்ந்த நிலையில் அநாதரவாக 4 பேர் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன் பொலிஸாரும் அவர்களை மீட்டனர்.

இவர்கள், பாதசாரிகளின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் வைத்தியர்கள் இவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேற்படி நால்வரும் குறித்த தொடர்மாடிக் குடியிருப்பில் குடியிருக்கவில்லை என்றும் அக்குடியிருப்பிலிருந்து ஒன்றறை மையில் தூரத்திலே வசித்து வந்தார்கள் என்றும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த பெண் இக்குடியிருப்பில் 14 ஆவது மாடிக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்று ஜன்னல் வழியாக பிள்ளைகளை தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நிகழும்போது அப் பெண்ணின் கணவர் தொழில்புரியும் இடத்திற்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .