2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பல்லியை பிரசவித்த பெண்

Kogilavani   / 2014 ஜூன் 13 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமமான ஈனன்டாவில் பெண்ணொருவர் பல்லியொன்றை பிரசவித்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், அப்பெண் மாந்திரீக குழுவொன்றின் அச்சுறுத்துலுக்கும் உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்படி கிராமத்தைச் சேர்ந்த டெபி நியுபடொனிஸ் என்ற 31 வயது பெண்ணே இவ்வாறு பல்லியை பிரசவித்துள்ளார்.

எட்டு மாத  கர்ப்பிணியான இப்பெண் பல்லியை பிரசவித்த செய்தியை அறிந்த மேலதிகாரிகள் அது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை மேற்படி கிராமத்திற்கு அனுப்பியுள்ளனர்.

பெண்ணொருவர் பல்லியை பிரசவிப்பது என்பது மூடத்தனமான கதை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்கள்  தர்க்க ரீதியான விளக்கங்களை கோரியுள்ளனர்.

'பெண்ணொருவர் பிரசவ வலியால் துடிப்பதாக கேள்வியுற்று நான் அவ்விடத்திற்கு சென்றேன். அதன்போது அப்பெண் பல்லியை பிரசவித்ததை கண்டு நான் அதிர்ந்து போனேன்'  என இப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ தாதி தெரிவித்துள்ளார்.

'இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்றை அங்கு அனுப்பியுள்ளோம். எப்படியிருப்பினும் அக்குழு இறுதி அறிக்கையை சமர்ப்பித்து விடும். இது மூடத்தனமான கதை என்பது தெளிவாக புரிகிறது' என சிரேஷ்ட மருத்து அதிகாரியான மேஸ் அடப்பு தெரிவித்துள்ளார்.

'நாங்கள் உள்ளூர் மக்களிடம் விசாரித்தோம். அவர்கள் அப்பெண் கர்ப்பிணியாக இருந்ததாக உறுதியாக கூறுகின்றார்கள். ஆனால், நாங்கள் அதை போலியான கர்ப்பமென்றெ நம்புகிறோம்' என அக்குழு தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .