2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நிர்வாண சைக்கிளோட்ட ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 11 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


கார் ஓட்டப் போட்டியின் மாற்றீடாக சைக்கிள் ஓட்டப் போட்டி அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சைக்கிள் ஓட்டுநர்கள் நிர்வாண கோலத்தில் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
 
சர்வதேச நிர்வாண சைக்கிளோட்டப் போட்டியின் 11ஆவது ஆண்டு நிறைவையொட்டி இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
 
கிரீஸ் நாட்டின் போட்லாந்து, ஓர்கன், பார்சிலோனா, தெசலொனிகி, மான்செஸ்டர் மற்றும் பிரைடன் ஆகிய பிரதேசங்களில் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், பங்குபற்றிய 8 ஆயிரம் பேரில் சுமார் ஆயிரம் பேர், நிர்வாண கோலத்தில் குறித்த பிரதேசத்தை சுற்றி சைக்கிளில் பயணித்துள்ளனர்.

இவ்வாறனதொரு ஆர்ப்பாட்டமொன்று கடந்த ஆண்டும் நடைபெற்றது. ஆனால் இம்முறை நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் கடந்த முறையை விட 200பேர் அதிகமாக நிர்வாண கோலத்தில் கலந்துகொண்டனர் என்று ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர், ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நாம் நிர்வாண கோலத்தில் தெருவில் செல்லும்போது அனைவரும் வாயை பிளந்துகொண்டு முறைத்து பாரத்துக்கொண்டிருந்தனர். எமக்கும் இது ஓர் ஆர்ப்பாட்டமாக இருந்தாலும் இதுவொரு அதிசயக் காட்சியொன்றாகவே தெரிந்தது.

அதனால், மிகவும் குதூகலமாக பங்குபற்றினோம் என்று இந்நிகழ்வில் கலந்துகொண்ட சைக்கிள் ஓட்டுநரொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தைப் பார்க்க விரும்பாதவர்களிடமிருந்து பல்வேறு முறைபாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்றன. இதனை பார்க்க வேண்டுமென்றால் வெளியே வரலாம் இல்லையொன்றால் வீட்டினுள்ளே இருக்கலாம் என்று அந்நாட்டு பொலிஸார் அறிவித்திருந்தனர் என அவர் மேலும் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .