2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மது அருந்தும் மீன்கள்

Menaka Mookandi   / 2014 ஜூன் 11 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


மீன்களுக்கு மது கொடுத்தால் அவை வேகமாக நீந்தும் ஆற்றலைப் பெறுகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 
மனிதர்கள் மது அருந்தினால் தள்ளாடுவதும் இதன்போது அவர்களை யாராவது பிடித்தால் திமிறுவதும் உண்டு. இந்த நிலை மீன்களுக்கும் பொருந்தும் என   விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
நியூயோர்க் பொலிடெக்னிக் ஸ்கூல் ஒஃப் என்ஜினியரிங்கைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர், மீன்களை வைத்து புதிய ஆராய்ச்சியொன்றை மேற்கொண்டுள்ளனர்.
 
இவ்விஞ்ஞானிகள், தங்களது ஆராய்ச்சிக்காக வரிக்குதிரையின மீன்களைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த மீன்களுக்கு அவர்கள் மதுவை அருந்தக் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் அவற்றை நீரில் நீந்த விட்டுள்ளனர்.
 
மது அருந்திய பிறகு அந்த மீன்கள், வழக்கத்தை விட வேகமாக நீந்தியுள்ளன. அதைப் பார்த்த ஏனைய மது அருந்ததாத மீன்களும் வேகமாக நீந்தியுள்ளன என்று தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இந்த ஆய்வு மூலம் புதிய மருத்துவ சிகிச்சை முறைகளை கண்டறியலாம் என்றும் கூறியுள்ளனர்.(தட்ஸ் தமிழ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .