2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நாய்களுக்கான நீச்சல் தடாகம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 11 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாய்களுக்கான நீச்சல் தடாகமொன்று ஸ்பெனிஷ் நகரத்தில் உள்ள ஹோட்டலொன்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரொகே டெல் வெலாஸ் நகரில் உள்ள கெனியன் கென் ஜென் எனும் ஹோட்டல் ஒன்றிலேயே இவ்வாறனதொரு நீச்சல் தடாகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து இன நாய்களுக்கும் ஏற்றவகையில் இத்தடாகம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நாய்கள் சறுக்கி விளையாடுவதற்கென்றொரு இடமும் அமைக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு நீச்சல் தடாகம் ஒன்றில் மனிதர்களுடன் நாய்களும் சேர்ந்து நீராடுவதை கண்டேன். அப்போதுதான் எனக்கு இவ்வாறானதொரு எண்ணம் தோன்றியது. மனிதர்களுடன் நாய்கள் நீராடுவதைவிட நாய்களுக்கொன்று தனியொரு நீச்சல் தடாகம் இருந்தால் நன்றாக இருக்கும்.

அதேபோன்று ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிக வெப்ப காலத்தில் மனிதர்கள் நீராடுவதையே விரும்புகின்றனர். அதேபோல நாய்களும் விரும்பும். தற்போது வடிவமைத்துள்ள இந்த நீச்சல் தடாகம் நாய்களுக்கு மிகவும் பிடித்தமானவை. ஏனெனில் ஒரு கடற்கரையை போலவே இது அமைக்கப்பட்டுள்ளது  என்று ஹோட்டல் முகாமையாளர் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .