2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நிர்வாணமாக விளையாடக்கூடிய டேபிள் டென்னிஸ்

Kanagaraj   / 2014 மே 13 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


லண்டனில் உள்ள டேபிள் டென்னிஸ் கழகமொன்றில் டென்னிஸ் விளையாட வருபவர்கள் நிர்வாணமாக விளையாடக்கூடிய வகையில் அக்கழகம் புதியதொரு அறையொன்றை வடிவமைத்துள்ளது.

1901ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விளையாட்டை, நிர்வாணமாக விளையாடக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டமை உலகளாவிய ரீதியில் இதுவே முதல் தடவை என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிர்வாண விளையாட்டானது ஒரு தனிப்பட்ட அறையொன்றினுள்ளேயே விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை வடிவமைப்பதற்காக 2.5 மில்லியன் பவுண்ட்ஸ் செலவளிக்கப்பட்டுள்ளது.
 
இங்கு நிர்வாணமாக டேபிள் டென்னிஸ் விளையாட வருபவர்களுடன் பங்கேற்பதற்கு 7 பேரைக்கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்களையும் மூன்று பெண்களையும் கொண்ட இக்குழுவில் உள்ளவர்கள் அனைவரும் மொடல்களாவர். வெளியிலிருந்து இவ்விளையாட்டை விளையாட வருபவர்களுடன் இவர்களே விளையாடுவார்களாம்.

இந்த புதிய முயற்சி தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இக்கழகத்தில் விளையாடும் ஸ்டீபன் ஜோன்சன், நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வித்தியாசமாக என்ன செய்யலாம் என்று யோசித்தோம். இவ்வாறான யோசனையொன்று தோன்றியபோது அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தோம் என்று கூறியுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .