2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அதிசய கட்டியால் அதிர்ச்சியுற்ற தாய்

Kanagaraj   / 2014 மே 13 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரிட்டனின் நோதம்பொன்சியர், கோபை எனும் பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருவருக்கு பிறந்த சிசுவின் தோற்பட்டையில் கட்டியொன்று காணப்பட்டது.

இதனைக் கண்ட தாய் தனது குழந்தைக்கு இரண்டு தலைகள் இருப்பதாக எண்ணி அதிர்ச்சியடைந்துள்ளார்.
 
எலி வெல்மென்- ஸ்மித் (வயது 20) எனும் தாயொருவருக்கே இவ்வாறானதொரு சிசு பிறந்துள்ளது என அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குழந்தை பிறந்தையடுத்து மயக்கமுற்றிருந்த குறித்த தாய், கண்விழிக்கும் போது குழந்தையின் தோற்பட்டையில் பாரிய கட்டியொன்று காணப்பட்டதைக் கண்டு, தனது குழந்தைக்கு இரண்டு தலைகள் உள்ளதென அதிர்ச்சியடைந்துள்ளார்.

13 சென்றிமீற்றர் நீளமடைய அந்த கட்டியானது 5 வேவ்வேறு சத்திர சிகிச்சைகளின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில், 15 கிழமைகள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பின்னர் குழந்தையுடன் குறித்த தாய் வீடு திரும்பியுள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .