2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

விமானத்தில் பயணிப்பதற்கான அனுமதியை பெற்ற நாய்

Kogilavani   / 2014 மே 06 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


விமானத்தில் பயணிப்பதற்கான முதலாவது அனுமதியை லபரேட்டர் இனத்தை சேர்ந்த நாயொன்று பெற்றுள்ளது.

பிரிட்டன், பொட்போர்ட்ஷேர் நகரத்தில் வசிக்கும் மவுன்ட் போர்;ட் என்பவர் செல்லப்பிராணியாக வளர்த்து வரும் காலி என்ற நாய்க்கே இந்த அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.  

இதன்மூலம் உலகிலேயே விமானத்தில் பயணிப்பதற்கான முதலாவது அனுமதியை பெற்ற நாய் என்ற பெறுமையை இது தனதாக்கிகொண்டுள்ளது.

குறித்த நாயானது பிறந்து 12 கிழமைகளில் இருந்து 3 வயதாகும் வரை 250 மணித்தியாலங்களில் சுமார் 50,000 மைல் வரை விமானத்தில் பயணித்துள்ளது.

விமானத்தில் பயணிப்பதற்கான சொகுசான உடை, பட்டி மற்றும் ஆசனம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நிலத்தில் விமானத்தை இறக்கும் போது அதற்கு இறைச்சிகள் வழங்கப்படுகின்றதாம்.

காலி எனது மிகவும் நம்பிக்கையான நண்பன் என்று நாயின் உரிமையானர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .