2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

விந்துக்களை கலந்து கேக் தயாரித்த சிறுமி

Kogilavani   / 2014 மே 06 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆண்களின் விந்துக்களை கலந்து கேக் தயாரித்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த சிறுமியொருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கலவிப் பயிலும் சிறுமியொருவர் மீதே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தான் கல்வி கற்கும் பாடசாலையில் அட்டூழியம் செய்யும் மாணவர்களுக்காக இவ்வாறு விந்துக்களை கலந்து கேக் தயாரித்ததாக அம்மாணவி விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

இம்மாணவி தான் தயாரித்த கேக்கை தனது சக மாணவர்களுக்கு கொடுத்துள்ளார். இதன்போது அம்மாணவர்கள் அந்த கேக்கை வாங்கியுள்ளனர். அதில் ஒரு மாணவி மட்டும் அந்த கேக்கை தனது வீட்டுக்கும் எடுத்துச் சென்றுள்ளார்.

வழமையான கேக்கை விட இந்த கேக் சுவையற்று காணப்படுவது ஏன் என அம்மாணவியிடம் சக மாணவர்கள் கேட்டபோது, கேக்கில் உடல் திரவங்களை கலந்துள்ளதாக அம்மாணவி தெரிவித்துள்ளார். இந்நிலையிலே இவ்விடயம் வெளியில் தெரியவந்துள்ளது.

மேற்படி மாணவி அந்தரங்க பகுதிகளில் காணப்படும் உரோமங்கள், விந்தனு போன்றவற்றை கலந்து இந்த கேக்கை செய்துள்ளதாக அம்மாணவியின் சக வகுப்பு மாணவி ஒருவர் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த கேக் மயோனிஸ், பார்பிக்கியு சோஸ் மற்றும் சோயா சோஸ் என்பவற்றை கலந்தே தயாரிக்கப்பட்டுள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. அதிகாரிகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .