2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மனைவி வர மறுத்ததால் மாமனாரின் காதை கடித்து துப்பிய மருமகன்

Kanagaraj   / 2014 மே 04 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்மா வீட்டில் தங்கியிருந்த மனைவி, வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டு, தன்னுடன் வர மறுத்ததால் கோபமடைந்த கணவர்  மாமனாரின் காதைக் கடித்துத் துப்பிய சம்பவம் தமிழ்நாட்டில் ஈரோட்டில் இடம்பெற்றுள்ளது.

ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனியார் கல்லூரி ஒன்றின் பஸ் சாரதியாக பணிபுரிகின்றார்.அவரது மனைவி பெயர் சுமதி. சில ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மூன்று ஆண்டுக்கு முன் முருகேசன்-சுமதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து கணவரை பிரிந்து சென்றுள்ளார் சுமதி.

சில மாதங்களுக்கு பிறகு, சுமதி வேறு ஒருவருடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த நபருடன் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து அவரை விட்டு பிரிந்த சுமதி சில வாரங்களுக்கு முன் பெற்றோர் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

இதை தெரிந்துகொண்ட முருகேசன், மாமனார் வீட்டுக்கு சென்று மீண்டும் தன்னுடன் வருமாறு மனைவியை அழைத்துள்ளார். ஆனால், சுமதி முருகேசனுடன் வர மறுத்து விட்டார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது மருமகன் முருகேசனை, மாமனார் சுப்பிரமணியன் திட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த முருகேசன், மாமனாரின் வலது காதை கோபத்துடன் கடித்து துப்பியுள்ளார். இதனை தொடர்ந்து பொலிஸார் முருகேசனை கைது செய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .