2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

உலோகத்திலான பாதணி

Kogilavani   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகில் நீண்ட காலங்களுக்கு பயன்படுத்தக்கூடிய உலோகத்திலான பாதணியொன்று  பிரிட்டனில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த வடிவமைப்பாளர் கிரிஸ் ஷெலைஸ் இதனை வடிவமைத்துள்ளார்.

இப்பாதணியானது 1000 வருடங்கள் பாவிக்ககூடிய நிலையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த பாதணியானது உலகிலே மிகவும் வசதிமிக்க பொறுத்தமான பாதணியாக காணப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்பாதணிகள், துருப்பிடிக்காத உலோகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பாதணியை பயன்படுத்தும்போது ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக சிலிக்கன் பகுதி ஒன்றும் இதில் பொறுத்தப்பட்டுள்ளது.    

இப்பாதணியை தயாரிப்பதற்காக அவர் 2 வருடங்களை செலவிட்டுள்ளார்.

பெண்களை ஈர்க்கும் வகையில் ஒரு சின்னமாக உலகில் ஏதேனும் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .