2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பாட்டுப்பாடி கடத்தல்காரரிடமிருந்து தப்பிய சிறுவன்

Kogilavani   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


எரிச்சலூட்டும் வகையில் பாடல்களை பாடி கடத்தல் காரர்களிடமிருந்து சிறுவன் ஒருவன் தப்பிய சம்பவமொன்று ஜோர்ஜியாவில் இடம்பெற்றுள்ளது.

ஜோர்ஜியாவின் அட்லாண்டா பிரதேசத்தில் வசித்து வரும் வில்லி மிரிக் என்ற 10 வயது சிறுவனே இவ்வாறு கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொள்ளைக்காரர் கும்பலொன்று மேற்படி சிறுவனை கடத்தி 3 மணித்தியாலங்கள் காரொன்றினுள் அடைத்து வைத்துள்ளனர். இதேவேளை, குறித்த சிறுவனின் குடும்பத்தாரிடம் தொடர்புகொண்டு சிறுவனை கடத்தி விட்டதாகவும் ஒருதொகை பணத்தை கொடுத்தால் மட்டுமே சிறுவனை உயிருடன் விடுவிக்க முடியுமென்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் தான் கடத்தப்பட்டதை பொருட்படுத்தாத அச்சிறுவன் எரிச்சலூட்டும் வகையில் தொடர்ந்து 3 மணித்தியாலங்கள் காரினுள் இருந்தப்படி பாடல்களை பாடியுள்ளார்.

சிறுவனின் தொந்தரவை தாங்க முடியாத கடத்தல்காரர்கள், கடத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஒருவருக்கும் எதையும் கூறக்கூடாது என்று எச்சரித்துவிட்டு சிறுவனை காரிலிருந்து தள்ளிவிட்டுள்ளனர்.

'காரின் கதவைத்திறந்து என்னை வெளியே தள்ளிவிட்டு, யாரிடமும் சொல்லாதே என்று கடத்தல்காரர்கள் கூறினர்' என குறித்த சிறுவன் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு பொலிஸார் சிறுவனை கடத்தியவரை கைதுசெய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .