2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மலைப்பாம்புகளை உடலில் ஊரவிட்ட நபர்

Kogilavani   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


நபரொருவர் தனது கைகளில் ஏற்பட்ட மிக பழைமையான காயங்களை போக்குவதற்காக நான்கு மலைப்பாம்புகளை உடலில் ஊரவிட்ட சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்கொட்லாந்து, ஹெலன்ஸ்பிரக் பகுதியை சேர்ந்த மெக்லன் என்ற நபரே  நான்கு மலைப்பாம்புகளை இவ்வாறு தனது உடலில் ஊரவிட்டுள்ளார்.

சுமார் 250 கிலோகிராம் நிறைகொண்ட பாம்புகளை இவர் தனது உடலில் சுமந்திருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

'கைகளில் ஏற்பட்ட பழைய காயங்களை ஆற்றுவதற்கு சிறந்த மருத்துவ முறை இதுவென நண்பர் ஒருவரே எனக்கு கூறினார். இந்த மருத்துவ முறையானது மன அழுத்தங்களையும் குறைக்கின்றது' என அந்நபர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

இதேவேளை, 'மேற்படி நான்கு பாம்புகளும் சராசரி எனது உடலின் நீளத்தை கொண்டே காணப்பட்டன. அப்பாம்புகளின் வழுக்கிச் செல்லும் தன்மை உடலுக்கு மிருதுவாக இருந்தது. ஆனால், அப்பாம்புகள் எனது முகத்தை தீண்டும்போது மட்டும் சங்கடமாக இருந்தது.

இப் பாம்புகளும் உடலின் மீது இருக்கும்போத மற்றொருவரின் உதவியின்றி எழும்ப முடியாது. எனவே பாம்புகள் குறித்து அச்சப்படதேவையில்லை.

பாம்புகள் உடலின் மீது இருக்கும்போது நான் என்னை தளர்வு நிலைக்கு கொண்டு சென்று எனது உடலில் உள்ள அனைத்து நோய்களும் இல்லாமல் போக வேண்டுமென கடவுளை பிரார்த்தித்தேன்' என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தோனேஷியா, தாய்லாந்து, பிரிட்டன் போன்ற நாடுகளில் தற்போது பாம்பு மசாஜானது பரவலாக செய்யப்பட்டு வருகின்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .