2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மார்பை பதம் பார்த்த பாம்பு

Kogilavani   / 2014 மார்ச் 11 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொவரின் மார்பை பாம்பொன்று பதம்பார்த்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா, கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த கரோலினி கிரிப்பின் என்ற பெண்ணே இவ்வாறு பாம்புக் கடிக்கு உள்ளாகியுள்ளார்.
மேற்படி பெண்ணை அயலவர் ஒருவர் வளர்த்து வந்த பாம்பு ஒன்றே இவ்வாறு கடித்துள்ளது.

பாம்பொன்று மார்பு பகுதியில் ஊர்ந்துகொண்டிருப்பதை அவதானித்து தான் திடுக்கிட்டு எழுந்து பார்த்தாகவும் அதனை வெளியில் எடுத்து எறிய முற்பட்டபோது அது தனது விச பற்களால் மார்பை தீண்டிவிட்டதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

'முதலில் எனது பிள்ளைகள் விளையாடுவதாகவே நினைத்தேன். ஆனால், ஏதோ ஒன்று உடலில் ஊர்வதை அவதானித்தேன். பின்பு பயம் தொற்றிகொண்டது. உடனே வீரிட்டு கத்தியதுடன் மார்பை அவதானித்தேன்.

4 அடி நீளமான பாம்பு ஒன்று மார்பின் மீது ஊர்ந்து கொண்டு இருந்தது. அதனை கண்டு கூச்சலிட்ட நான் அதனை வெளியில் எடுத்து வீச முயன்றபோது அது மார்பை கடித்துவிட்டது. இருந்தும் நான் அதனை தூக்கி எறிந்துவிட்டேன்' என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அப்பெண்ணின் கூச்சலை கேட்டு, குறித்த பாம்பின் உரிமையாளரான கர்த்தி நிவான் (வயது 20) என்பவர் ஓடி சென்று பார்த்துள்ளார். இதன்போது அப்பெண் நடந்த விடயத்தை கூறியுள்ளார்.

அந்த பாம்பு தனது வளர்ப்பு பிராணி என்றும் அது விஷமற்றது என்றும் கர்த்தி நிவான் அப்பெண்ணிடம் கூறிய பின்பே அப் பெண் தனது அழுகையை நிறுத்தியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .