2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

விரிவுரையின் நடுவில் சிற்றுண்டி தயாரித்து உண்ட மாணவன்

Kogilavani   / 2014 மார்ச் 11 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் கற்பிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுகொண்டிருக்க மாணவர்கள் அதனை பொருட்படுத்தாது இடைவேளை உணவை வகுப்பில் வைத்து உண்பார்கள். இது ஒரு வழமையான செயற்பாடு. ஆனால், வெளிநாடொன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் விரிவுரை நடந்துகொண்டிருக்கும்போது டோஸ்டரினால் சிற்றுண்டி சமைத்து உண்டுள்ளார்.

இது பலரை ஆச்சர்யத்திற்குள் ஆழ்த்தியுள்ளது.

ஸ்கொட்லாந்தின் மேற்கு பகுதியிலுள்ள பல்கலைக்கழத்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரோஸ் மைல்ன் என்ற டுவிட்டர் இணையத்தள பாவனையாளர் தனது டுவிட்டர் இணையத்தளத்தில் படமொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த படத்தில் மாணவன் ஒருவன் சீஸ்ஸிலான சிற்றுண்டியை தயாரிப்பதும் பின்னர் அதனை டோஸ்டரில் இட்டு டோஸ்டரை இயக்குவதுமான காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், மற்றுமொரு காட்சியில் நபர் ஒருவர் சிற்றுண்டி ஒன்றை வெட்ட அதனை மாணவன் ஒருவன் எதிர்பராதவிதமாக பார்த்துவிடுவது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன.

இச்சம்பவத்தை பார்த்த தமது அதிருப்திகளை வெளியிட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .