2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சாகசங்களால் அதிர வைக்கும் பெண்

Kogilavani   / 2014 மார்ச் 03 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆண்களே செய்ய அஞ்சும் உயிர் ஆபத்துமிக்க சாகசங்களை இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் மிகவும் நுணுக்கமாக செய்து பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

வயிற்றில் தேங்காயை வைத்து கூறிய ஆயதத்தால் இரண்டாக பிளப்பது மற்றும் கழுத்தில்  ஓடுகள் பலவற்றை ஒன்றாக வைத்து அதனை ஒரே நேரத்தில் உடைப்பது ஐஸ் கட்டிகளை உடலில் வைத்து உடைப்பது போன்ற பல்வேறு சாகசங்களால் பலரையும் அதிரவைக்கின்றார் இவர்.

இந்தியாவின் தென்கிழக்கு பகுதியை சேர்ந்த பிரம்பாரம்பா பௌடி எனற 39 வயதுடைய பெண்ணே இத்தகைய சாகசங்களை புரிந்து வருகின்றார்.

இவர் இத்தகைய உயிர் ஆபத்துமிக்க சாகசங்களை புரிவதற்கு அவரது கணவரான பாலசங்கர் பௌட்டி (வயது 40) உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் மட்டுமல்லாது இவரது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளும் இத்தகைய சாகச வீரர்களாகவே காணப்படுகின்றனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .