2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மகனின் வாய்க்கு பூட்டு போட்டு கதற கதற கொன்ற தந்தை

Kogilavani   / 2014 பெப்ரவரி 26 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகனை சாத்தானின் பிள்ளையென கருதிய தந்தையொருவர் அவனை கொலை செய்வதற்காக அடித்து துன்புறுத்தியதுடன் தான் அடிக்கும்போது  அவன் வீரிட்டு அழும் சத்தம் வெளியில்  கேட்டுவிடக்கூடாது என்பதற்காக அவனது வாய்க்கு கதற கதற பூட்டு போட்ட சம்பவம் நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் தந்தையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சரிஸ் எல்விஸ் என்று அழைக்கப்படும் 30 வயது நபரே இத்தகைய கொடூர செயலை புரிந்துள்ளார்.

இவர் தனது மகன் அதிஷ்டமில்லாதவன் என்று நினைத்து  இத்தகைய கொடூர  செயலை புரிந்துள்ளதாக நைஜீரியாவின் லாகோஸ் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நபர் தனது மகனை மின்னழுத்தியினால் பலவாறு சுட்டுள்ளதுடன் அவனை அடித்து குப்பை வாளியொன்றினுள் திணித்துள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

மேற்படி சிறுவனின் தாய் வீட்டில் இல்லாதபோது இச்சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அச்சிறுவனின் தாய் வீட்டினுள் வந்து மகனுக்கு நேர்ந்த கொடூர செயலை கண்டு கதறி அழுதுள்ளார். பின்னர் அது தொடர்பில்  பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார்.

இந்நிலையிலே அல்விஸ் பொலிஸாரனால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

'குழந்தைகள் சாத்தானின் வடிவங்கள். உள்ளூர் அனர்த்தங்களுக்கு அவர்களே காரணம்' என நைஜீரியா உள்ளவர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர்.

இதேபோல், மற்றுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது. சிறுவன் ஒருவனை கொல்வதற்காக  அச்சிறுவனை அமிலத்தில் குளிக்க வைத்துள்ளதாக பிரிட்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் தொண்டு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

அதேபோல், நைஜீரியாவில் உள்ள பாடசாலையொன்றின் விடுதிக்கு சென்ற குழுவொன்று அங்கிருந்த 29 சிறுவர்களை குத்தி அல்லது சுட்டுகொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • pathmadeva Wednesday, 26 February 2014 03:48 PM

    இதுபோன்ற காட்டுமிராண்டித்தனங்கள் இன்னுமா இந்த உலகத்தில் உள்ளன?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .