2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அதிக வயதில் இரட்டைக் குழந்தைகளை பெற்ற சீன பாட்டி

Kogilavani   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


செயற்கை முறையில் கருத்தரித்து இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பாட்டி சீனாவில் அதிக வயதில் குழந்தைகளை பெற்றுகொண்ட பெண் என்ற பெறுமையை பெற்றுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த ஷெங்ஹைலின் என்ற 60 வயது பாட்டி கடந்த 2010 ஆம் ஆண்டு செயற்கை முறையில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார். 

இதனூடாகவே அவர், சீனாவில் அதிக வயதான பிறகு இரட்டைக் குழந்தைகளை பிரசிவித்த பெறுமையை பெற்றுகொண்டுள்ளார்.
இவருக்கு ஏற்கனவே 29 வயதில் மகள் ஒருவர் இருந்துள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு   சீனாவில் நடந்த விஷவாயு தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் சீனாவில் அமுலில் உள்ள நிலையில் தனக்காக இருந்த ஒரே ஒரு மகளும் இறந்துவிட்டார் என்ற கவலையில் மேற்படி பாட்டி வாடத்தொடங்கினார். கடைசிக் காலத்தை தானும் தனது கணவரும் தனிமையில் கழிக்க வேண்டி வரும் என அஞ்சிய அவர் மீண்டும் குழந்தை பெற முடிவு செய்தார்.

இதற்காக சீனாவின், ஹெய்பியில் உள்ள இராணுவ மருத்துவமனையை அவர் நாடினார். பொதுவாக குழந்தையின் நலன் கருதி வயது முதிர்ந்த பெண்களுக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சை முறை மேற்கொள்ளப் படுவதில்லை.

ஆனால் தனிமை நிலையை கருத்தில் கொண்டு ஷெங்ஹைலினுக்கு சிகிச்சை மூலம் மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்ட இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது அவர்களுக்கு மூன்று வயதாகின்றன.
'எதிர்காலம் தனிமையில் கழிந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த வயதில் குழந்தைகளை பெற்றுகொண்டோம். அவர்களை சிறப்பாக வளர்த்து வருகிறோம்'  என இக்குழந்தைகள் தொடர்பில் மேற்படி பாட்டி தெரிவித்துள்ளார்.

'எனது பெண் குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் நான் அவர்களுக்கு வழங்கியுள்ளேன்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .