2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நிர்வாண கோலத்தில் திருமணம்: சிறையில் தேநிலவு

Kogilavani   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொது இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்துகொண்;ட தம்பதியை பொலிஸார் கைதுசெய்த சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

பொது இடங்களில் நிர்வாணமாக நடப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக நிர்வாண கிளப் என்ற ஒன்றை ஆரம்பித்து அதன் உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதன் உறுப்பினர்களான காதல் ஜோடி ஒன்று பொது இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்த  பொலிஸார் இருவரையும் மிக பெரிய சால்வையால் மூடியதுடன் பொது இடத்தில் நிர்வாணமாக வந்து இடையூறு செய்த காரணத்துக்காக இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேற்படி இருவரும் தற்போது, சிறையில் உள்ளனர்.

எல்லோரும் திருமணம் முடிந்து தேனிலவுக்கு வெளியூருக்குச் செல்வது போல், இவர்கள் தற்போது சிறையில் தேனிலவு கொண்டாடி வருகின்றனர் என்கின்றனர் அவர்களது நண்பர்கள்.




You May Also Like

  Comments - 0

  • Rizwan Tuesday, 24 December 2013 03:41 AM

    மனிதன் குரங்கிலிருந்து வ‌ரவில்லை என்பது உறுதி. ஆனால் சிலர் குரங்காகிக்கொண்டு போகிறார்களோ என்ற சந்தேகம் இவர்களை பார்தால் உருவாகிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .