2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அதிசய சிசு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒரு தாய்க்கு குழந்தை பிறப்பதென்பதே அதிசயம்தான். அதிலும், சிலருக்கு அதிர்ஷ்டவசமான தினங்களில் குழந்தை கிடைப்பதென்பதும் அபூர்வமானதுதான். அந்தவகையில், கடந்த 11ஆம் திகதி மாலை 2.15இற்கு ஒரு குழந்தை இங்கிலாந்தின் தென் ஜோக்ஸியர் பகுதியில் பிறந்திருக்கிறது. இதிலென்ன அதிசயம் என்று எண்ணுகிறீர்களா? அந்த குழந்தை பிறந்த நேரத்தைப் பார்த்தீர்களேயானால் அசந்துபோய்விடுவீர்கள். அதாவது 11ஆம் திகதி, 12ஆம் மாதம், 13ஆம் ஆண்டு, 14 மணி, 15 நிமிடத்திற்கு குழந்தை பிறந்திருக்கிறது. 11.12.13.14.15 என்ற அதிசயமே அதுவாகும்.
 
இங்கிலாந்தின் தென் ஜோக்ஸியர் பகுதியில் றொதெஹாம் பகுதி தொலைத் தொடர்பு நிலையமொன்றில் பணிபுரியும் செல்ஸியா என்ற தாயே, இந்த அபூர்வ குழந்தையினை ஈன்றெடுத்துள்ளார். இந்த அபூர்வ சிசுவிற்கு லாண்டன் ஜொனா என பெயர் சூட்டியிருக்கிறார்கள். 
 
தனக்கு பிரசவ வலி எடுத்தபோது தனது கணவரான பென் பிறவுணும் தனது தாயாராரும் உடனிருந்ததாக குறிப்பிட்டார். இப்படியான அதிசய நிகழ்வு இடம்பெறுவதென்பது 52 மில்லியனில் ஒரு தடவைதான் சாத்தியம் என்று குறிப்பிடுகிறார்கள்.


You May Also Like

  Comments - 0

  • suresh Thursday, 19 December 2013 08:34 AM

    என்னது அன்பு மனைவி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .