2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

'செத்துபோ' என்று நோயாளியை பார்த்து கூறிய கடிகாரம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 13 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருத்துவமனையில் உள்ள கடிகாரமொன்று நோயாளி ஒருவரை பார்த்து செத்து போ என்று கூறியதால் அதனைகேட்டு நோயாளி ஒருவர் அதிர்ச்சியடைந்த சம்பவமொன்று பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

பிரிட்டன், யார்க்சயில் உள்ள செப்பீல்டில் ரோயல் ஹாலம்ஷயர் என்ற மருத்துவமனையிலேயே இத்தகைய விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
இக்கடிகாரம் நோயாளியை பார்த்து செத்துபோ என்று கூறியதை அவ்வைத்தியசாலையில் இருந்த வைத்தியர்களும் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஜேர்மனில் தயாரிக்கப்பட்ட கடிகாரமே வைத்தியசாலையின் சுவரில் பொருத்தப்பட்டிருந்து.

டயன்ஸ்டாக் என்றால் ஜெர்மானிய மொழியில் செவ்வாய்கிழமை என்று அர்த்தமாம். அதன் சுருக்கத்தைதான் இந்த கடிகாரம் 'டை' என்று தெரிவித்துள்ளது. இவ்வாறு அக்கடிகாரம் கூறியதை கேட்டே வைத்தியர்களும், மேற்படி நோயாளியும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது, அக்கடிகாரம் ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டுள்ளதாம்.

ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்ட பிறகு கடிகாரம்  டியுஸ்டே என்பதனை டியு என்று சுருக்கமாக அழைக்கின்றதாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .