2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மீண்டும் கன்னித்தன்மையை ஏலம்விட்ட பிரேசில் மாணவி

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது கன்னித்தன்மையை 60 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் விடப்போவதாகவும், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறும் பிரேசிலைச் சேர்ந்த மாணவி ஒருவர் இணையத்தளத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

பிரேஸில் நாட்டை கேத்தரினா மிக்லிஒரினி என்ற (21) வயது மாணவியே இவ்வாறு தனது கன்னித்தன்மையை ஏலம்விட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தனது கன்னித்தன்மையை விலைபேசி இணையத்தளத்தில் ஏலம்விட்டமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் ஜப்பனை சேர்ந்த நட்ஜ் என்பவர் 2 இலட்சம் ரூபாய் பவுண்கள் பேரத்தில் வெற்றிபெற்றார்.

ஆனால் காரணம் தெரிவிக்கப்படாமல் அந்த ஒப்பந்தம் முறிந்து போனதாக  கேத்தரினா அறிவித்திருந்தார்;. இந்நிலையில், தற்போது மீண்டும் தனது கன்னித்தன்மையை ஏலம் விட முடிவெடுத்துள்ளார் கேத்தரினா.

ஏலத்திற்கான குறைந்த பட்சத்தொகையாக 60 இலட்சம் ரூபா கோரி இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார் இம்மாணவி. மேலும், எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் இந்த ஏலத்தில் பங்கெடுக்கலாம் என அவர் அறிவித்துள்ளார்.

இம்முறை, ஒரு கோடி ரூபாய் வரை ஏலம் கேட்பார்கள் என நம்பிக்கைத் தெரிவித்துள்ள கேத்தரினா, ஏலத்திற்கான கடைசித் திகதியாக டிசெம்பர் 1 ஐ அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

வறியவர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்காக கன்னித்தன்மையை ஏலமிட்ட மாணவி


You May Also Like

  Comments - 0

  • Rengaraj Monday, 25 November 2013 09:15 AM

    எதை விற்பது என விவஸ்தை இல்லாமல் போச்சு... இதற்கு ஒருகாரணம் வேற...? its only causes of illegal sex....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .