2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாடிக்கையாளர்களை கவரும் இரட்டையர்கள்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் இரட்டையர்களை மட்டுமே ஊழியராக தேர்ந்தெடுக்கும் செயற்பாட்டை மொஸ்கோவில் உள்ள உணவகம் ஒன்று மேற்கொண்டு வருகிறது.

இச்செயற்பாடானது பலரது கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் உணவகத்தில், ஆண், பெண் என இருபாலருமே பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவர்களை அணுகி வருகின்றனர்.

'வாடிக்கையாளர்களின் கவனமானது உணவகத்தில் பணிபுரியும் தொழிலார்களை சார்ந்திருக்க வேண்டும். பணியாளர்களை கருத்தில்கொண்டு வாடிக்கையாளர்கள் உணவகத்தை தேடி வரவேண்டும் என்ற நோக்கில்  நான் இவ்வாறான திட்டத்தை வகுத்தேன்' என இவ் உணவகத்தின் உரிமையாளரான எலெக்சி கொஹேடோர்விக்ஸி தெரிவித்தார்.

'இவ்வாறான எண்ணமானது 1960 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தை பார்த்த  பின்பு தோன்றியது. அந்த திரைப்படத்தில்,  இரட்டையர்களாக பிறந்த இருவரில் ஒருவர் காணாமல் போய்விட அவரை தேடும்பணியில் அவருடைய இணை பிறப்பான பாடசாலை சிறுமியொருவர் உலகையே சுற்றிவருகிறார். இறுதியில் அவரை கண்டு பிடித்துவிடுகின்றார்.

இந்த திரைப்படமே இரட்டையர்களை பணியாளர்களாக வைக்க வேண்டும் என்ற சிந்தனையை தோற்றவித்தது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான இரட்டையர்களை தேடிப்பிடிப்பது மிகவும் கடினமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உணவகத்தில் பணிபுரியும் இரட்டையர்கள் தனித்தனியாக இல்லாமல் இருவரும் சேர்ந்தவாறு வாடிக்கையாளர்களை கவனிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .