2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மாணவிக்கு நிர்வாண படங்களை அனுப்பிய ஆசிரியர் நெருக்கடியில்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 10 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவிக்கு நிர்வாண படங்களை அனுப்பிய குற்றத்திற்காக ஆசிரியர் ஒருவர் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார்.

16 வயது பாடசாலை மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவர் தனது நிர்வாண படங்களை அனுப்பிய குற்றத்திற்காக இருவருடங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த நெயல் மாசன் என்ற 28 வயதுடைய ஆசிரியரே இத்தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

இவர் மாணவிகளுக்கு நிர்வாண படங்களை அனுப்பியது மட்டுமல்லாது,
300 ஸ்டேலிங் பவுன் வீதம் மாணவிகளிடமிருந்து நிர்வாண படங்களை பெற்றுகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஒரு மாணவியிடம் இருந்து பெற்றுகொண்ட 17 நிர்வாண படங்களை இவர் தனது மடிக்கணினியில் பதிவேற்றம் செய்து வைத்திருந்த நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரது மடிக்கணினியையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், தனது மாணவிகளுடன் தகாத முறையில் நடந்துகொண்டதனை ஒப்புகொண்ட அவர், தனது நிர்வாண புகைப்படங்களை மாணவி ஒருத்தியின் மடிக்கணினிக்கும் அனுப்பி வைத்ததாக ஒப்புகொண்டுள்ளார்.

இவ் ஆசிரியரினால் பாதிக்கபட்ட மாணவி ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேற்படி ஆசிரியரின் இத்தகைய நடத்தை காரணமாக தாம் அதர்ச்சியடைந்துள்ளதாகவும் ஆண் ஆசிரியர்கள் மீத இனி நம்பிக்கை ஏற்படாது என்றும் ஏனைய மாணவிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .