2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

உதட்டுக்கு சுப்பர் குழு பூசிய பெண் நெருக்கடியில்

Kogilavani   / 2013 ஜூலை 02 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


உதட்டுச் சாயத்திற்கு பதிலாக சுப்பர் குழு பூசிய பெண்ணொருவர் நெருக்கடிக்குள் உள்ளான சம்பவம் நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

நியூசிலாந்தின் டுனேடின் பகுதியை சேர்ந்த 64 வயதுடைய பெண்ணே இத்தகைய விபரீத நிலையை எதிர்கொண்டுள்ளார்.

இவர் தவறுதலாக சுப்பர் குழுவை உதட்டில் பூசிகொண்டதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அம்பியூலன்ஸ் வண்டிக்கு அவசர அழைப்பை ஏற்படுத்திய அப்பெண் வாய் திறக்க முடியாது தனது இக்கட்டான நிலையை உணர்த்தியுள்ளார். உதடுகள் ஒட்டிகொண்ட நிலையில் அப்பெண்ணால் பேச முடியாமல் போனதுடன் சத்தத்தைமட்டுமே ஏற்படுத்த முடிந்துள்ளது.

இதனால், சரியான தகவலை பெற்றுகொள்ள முடியாத அம்பியூலன்ஸ் பிரிவினர் இவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகின்றதா? அல்லது விளையாட்டுக்காக யாரும் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார்களா என்ற குழப்பத்திற்கு உள்ளானதாக தெரிவித்துள்ளனர்.  

பின்னர் பொலிஸாரின் உதவியுடன் குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி பிரிவினர் அப் பெண்ணுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதை அறிந்து அப்பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .