2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நாய்களின் கழிவுகளை பொதியாக பெறும் உரிமையாளர்கள்

Kogilavani   / 2013 ஜூன் 06 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகர வீதியை அசுத்தப்படுத்தும் நாய்களின் கழிவுகளை சேகரித்து அதனை குறித்த நாய்களின் உரிமையாளருக்கே பொதிசெய்து அனுப்பும் விசித்திர சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களின் இத்தகைய செயற்பாடு காரணமாக ஸ்பெயின் தெருக்கள் அசுத்தமடைந்து வந்த நிலையில் அதனை தடுக்கும் முகமாக இத்தகைய செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஸ்பெயின், புருநெட் கவுன்சிலானது நாய்களின் பொறுப்பற்ற உரிமையாளருக்கு எதிராக பிரசாரம் ஒன்றை முன்னெடுத்தது.

இதனை தடுக்கும் வகையில் கண்காணிப்பாளர்களுக்கு ஒருவார கருத்தரங்கு ஒன்றை புருநெட் கவுன்சிலானது நடத்தி இருந்தது. இதில் 20 கண்காணிப்பாளர்கள் பங்குப்பற்றியிருந்தனர்.

கருத்தரங்கின் இறுதியில், நாய்களின் பொறுப்பற்ற உரிமையாளர்களின் செயற்பாடுகளை அவதானிப்பதற்காக மேற்படி 20 கண்காணிப்பாளர்களும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நாய்களுடன் உலாவ செல்லும் உரிமையாளர்களுடன் மேற்படி கண்காணிப்பாளர்கள் நட்பு முறையில் அறிமுகமாகி நாய்களின் பெயர்களை அறிந்துகொள்வர்.

இதற்கமைவாக, மேற்படி நாய்களின் கணினி விபரங்கள் பதியப்பட்டிருக்கும் பட்டியலை அடையாளங்கண்டு அதில் நாய்களின் பொறுப்பற்ற உரிமையாளர்களின் விலாசங்களை இந்த கண்காணிப்பாளர்கள் அறிந்துகொள்வர்.

பின்னர் எந்த நாய் தெருவை அசுத்தப்படுத்தியதோ அந்த நாயின் கழிவை சேகரித்து அதனை பொதிசெய்து குறித்த விலாசதத்திற்கு
அனுப்பிவைப்பர்.

குறித்த பொதியில் 'இழந்த சொத்து' என்று அடையாளப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். மொத்தமாக 147 பேருக்கு இந்த பொதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்விளைவாக, தெருவானது நாய்களால் அசுத்தப்படுத்தப்படுவது ஒருவாரத்திற்குள் 70 வீதமாக குறைவடைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .