2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பெரிய மார்பகங்கள் என்பதால் கல்லூரி விழாவிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவி

Kogilavani   / 2013 ஜூன் 05 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரிய மார்பகங்களை உடையதால் மாணவி ஒருவர் கல்லூரி ஆண்டுவிழாவிலிருந்து வெளியேற்றப்பட்ட  சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா, வொஷிங்கடனை சேர்ந்த பிரட்டானி மைண்டர் என்ற மாணவியே இவ்வாறு கல்லூரி ஆண்டு விழாவில் கலந்துகொள்வதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இப்பெண் பருமானான உடல்வாகுவை கொண்டவர். இவரது மார்பகங்களும் இயல்பாகவே பெரிதாக காணப்படுகின்றன.

இந்நிலையில், குறித்த கல்லூரியில் கல்வி கற்றுவரும் பிரிட்டானி கல்லூரி தின விழாவின்போது சிரேஷ்ட மாணவர்களால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

மேற்படி கல்லூரியின் ஆண்டு விழாவுக்கு மாணவ மாணவிகள் பல வர்ணங்களை கொண்ட ஆடைகளை அணிந்துவர முடிந்தாலும் கல்லூரி நிர்வாகம் ஆடைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையிலேயே பிரிட்டானி கல்லூரி ஆண்டு விழாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

'வயதுக்கேற்ற கவர்ச்சியுடன் பிரிட்டானி இல்லை. மாறாக அதீத கவர்ச்சியுடன் இருக்கிறார். அவரது ஆடையில் நீண்ட வெட்டுக்கள்  காணப்படுகின்றன' என கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

இதுகுறித்து பிரிட்டானி,

'நான் கல்லூரி விதிமுறைகளுக்கு உட்பட்டு நன்றாகதான் ஆடை அணிந்திருந்தேன். நான் தடிப்பமானவள்.  எவ்வாறான ஆடை அணிந்தாலும் அது என்னை கவர்ச்சியாகத்தான் காட்டும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இச்சம்பவம் காரணமாக இப்பெண் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

'கல்லூரி நிர்வாகம் எமது மகளின் சந்தோஷத்தை கெடுத்துவிட்டனர். அவரை அவமதித்து விட்டனர். இதற்காக கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கேட்கவேண்டும்' என்று அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .