2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கழிவறை குழாயிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் தாய்க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது

Kogilavani   / 2013 மே 31 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் கழிவறைக் குழாயில் இருந்து மீட்கப்பட்ட சிசுவின் தாய்க்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது  என சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனை தாம் ஒரு விபத்தாக கருதுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கழிவறைக் குழாயில் சிக்கித் திணறிக்கொண்டிருந்த நிலையில் ஆண் சிசுவொன்று ஒரு மணித்தியால போராட்டத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சீனாவின் செஜிங் மாகாணம், ஜினிஹா நகரில் உள்ள தொடர்மாடி குடியிருப்பிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது ஒரு கொலை முயற்சி எனத்தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்தததுடன் குறித்த சிசுவின் தாயையும் தேடி வந்தனர். இந்நிலையிலேயே, சீனா அதிகாரிகள் இவ்வாறான அறிவித்தலை விடுத்துள்ளனர்.

இக்குழந்தை சிறிய வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில்  மருத்துவமனையில் இருந்து மீண்டும் அதனது தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

'இந்தக் குழந்தையை கழிவறையில் 22 வயதுடைய தாய் ஒருவரே பிரசவித்துள்ளார். இவர் மலசலகூடத்தில் குழந்தையை பிரசவித்ததால் அது அந்த கழிவறைக் குழாயினுள் தவறுதலாக வீழ்ந்து உள்ளே சென்றுள்ளது. இதனால், அவரே அவசரப் பணியாளரை அழைத்திருக்கிறார்' என்று கூறப்படுகிறது. (பிபிசி தமிழ்)

தொடர்புடைய செய்தி

கழிவறை குழாய்க்குள் சிக்கியிருந்த சிசு மீட்பு

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .