2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கழிவறை குழாய்க்குள் சிக்கியிருந்த சிசு மீட்பு

Kogilavani   / 2013 மே 28 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் கழிவறைக் குழாயில் சிக்கித் திணறிக்கொண்டிருந்த ஆண் சிசுவொன்று ஒரு மணித்தியால போராட்டத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

சீனாவின் செஜிங் மாகாணம், ஜினிஹா நகரில் உள்ள தொடர்மாடி குடியிருப்பிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி தொடர்மாடிக் குடியிருப்பில் உள்ள வீடொன்றில் மலசலகூடத்திலிருந்து குழந்தை அழும் சத்தை கேட்ட அயலவர்கள் அது தொடர்பில் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.

தீயணைப்பு பிரிவினர் வந்து பார்த்தபோது சிசுவொன்று கழிப்பறைக் குழாயில் சிக்கியவாறு கிடந்துள்ளது.

தீயணைப்பு பிரிவினர் குறித்த சிசுவை குழாயிலிருந்து மீட்டெடுக்க முயற்சித்தபோதும் அந்த முயற்சி  பயணளிக்கவில்லை. இதனையடுத்து தீயணைப்பு பிரிவினர் குழாயை அறுத்தெடுத்து குழாயுடன் சேர்த்து சிசுவை  மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

பிறந்து 5 நாட்களே ஆனதாக கருதப்படும் இந்த சிசு,  குழாயில் 4 அங்குலத்தில் சிக்கியநிலையில் காணப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் மற்றும் தீயணைப்பு பிரிவினர் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் சிசுவை உயிருடன் மீட்டுள்ளனர்.

சிசு தற்போது ஆபத்தான நிலையிலிருந்து மீண்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இது ஒரு கொலை முயற்சி எனத்தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அந்த சிசுவின் பெற்றோரைதேடி வலைவீசியுள்ளனர்.

இந்த சிசுவுக்கு வைத்தியசாலை நிர்வாகம் இலக்கம்- 59 என்று பெயரிட்டுள்ளது.  அத்துடன் இந்த சிசுவிற்கு பலர் நலன்புரி உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .