2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக ஐரோப்பாவில் வெறுப்புணர்வு

Menaka Mookandi   / 2013 மே 17 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பாவில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் மற்றும் பெண்களில் பலர்  கடந்த ஐந்து வருடங்களில் தாக்குதல்களையும் பாரிய அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டிருந்ததாக ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
ஹோமோஃபோபியா என்று அழைக்கப்படும் குறித்த பிரிவினருக்கு எதிரான வெறுப்புணர்வு பற்றி ஆய்வு ஒன்றை நடத்திய ஐரோப்பிய ஒன்றியம் அந்த ஆய்வினை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் மேற்கண்டவாறான தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்க்கொண்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

அடிப்படை மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய கழகம் நடத்திய இந்த ஆய்வில் சுமார் 93 ஆயிரம் பேரிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

தம்முடைய பாலியல் விருப்பத் தெரிவுக்காக பாரபட்சத்தை எதிர்க்கொள்ளும் கஷ்டம் ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வகையான தாக்குதலுக்கு உள்ளான ஓரினச் சேர்க்கையாளர்கள் பலர் பலர் தாம் அது பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்வதில்லை என்று கூறியுள்ளனர். முறைப்பாடு செய்வதால் எதுவும் நடக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பிரிவினர் மீதான வெறுப்புணர்வு தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமான ஐரோப்பிய ஒன்றியக் கொள்கைகளை நிபுணர்கள் வகுக்கவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .