2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பிருடம் தெரியாமலிருக்க பொலி பேன்ட்

Kogilavani   / 2013 மே 16 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது பெரும்பாலானவர்கள் பிருடத்தின் ஒருபகுதி வெளியே தெரியும் வகையில் ஆடை அணிவதையே நாகரீகமாக கருதுகின்றனர்.

அவ்வாறு ஆடை அணிபவர்களுக்கு இந்த தகவலானது ஒரு பேரிடியாகவே இருக்கும்.

பிருட பகுதி வெளியே தெரியாமல் இருப்பதற்காக விசேட காற்சட்டை ஒன்று ஆண், பெண் இருபாலருக்குமாக பிரிட்டனில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பொலிசெல் என்ற நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. 'பொலி பேன்ட்' என்றழைக்கப்படும் இக்காற்சட்டையானது பிரிட்டனில் ஆண், பெண் இருபாலாருக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் பின்னர் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் வயதுவந்த 55 வீதமானவர்கள் தற்செயலாக தமது பிருடப்பகுதியை காட்ட நேருவதாக  ஆய்வொன்றில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதனை 61 வீதமான ஆண்கள் ஒத்துகொண்டுள்ளனர்.

பிரிட்டனில்  அதிகமாக, கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளர்களே இவ்வாறு தமது பிருடம் தெரியும் வகையில் காற்சட்டைகளை அணிந்துகொள்கின்றனர் என்று மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சராசாரியாக வாரத்தில் மூன்று தடவைகளாவது இவ்வாறு பிருடம் தெரியும் வகையில் ஆடைகளை பிரிட்டன்கள் அணிவதாக அவ் ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காற்சட்டைகளை அணியும்போது யாரும் தவறாக விமர்சித்தால் தாம் வெக்கப்படுவதாக மூன்றில் இரண்டு பங்கு பிரித்தானியர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களைவிட 79 வீதமான பெண்களே இவ்வாறான உணர்வை வெளிப்படுத்துவதாக அவ் ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தாம் இவ்வாறு காற்சட்டை அணிவதால் மிகவும் குளிர்ச்சியாக உணர்வதாக 7 வீதமானவர்களே தெரிவித்துள்ளனர்.

'பார்வையின்போது நேரிடும் அசௌகரியங்களை தவிர்த்துகொள்ளும் நோக்கில் பொலிசெல் பிரசாரம் செய்கின்றது' என பொலிசெல் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி சமந்த பொலொச் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .