2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

விமானத்தில் பாடியதால் விபரீதத்தை எதிர்கொண்ட பெண்

Kogilavani   / 2013 மே 13 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ வில் ஓல்வேய்ஸ் லவ் யூ' என்று  விமானத்தில்  பாடிய  பெண்ணொருவர் விபரீதத்ததை எதிர்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது

பயணிகளை அசௌகரிய படுத்தும் வகையில் இவர் பாடியதால்,  தான் பயணித்த விமானத்திலிருந்து பலவந்தமாக இறக்கிவிடப்பட்டுள்ளார்.

6 மணித்தியால பணத்தை மேற்கொண்டு அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் நகரத்திலிருந்து நியூ யோர்க்கிற்கு பயணம் மேற்கொண்ட விமானமே இவ்வாறு திட்டமிடப்படாத வகையில் கான்சாஸ் நகரில் தரையிரங்கியது.

இதனால் குறித்த பெண்ணின் தொல்லையிலிருந்து ஏனைய பயணிகள் மீண்டுள்ளனர்.

'குறித்த பெண் ஏனைய பயணிகளை அசௌகரியத்திற்குள் ஆழ்த்திவிட்டார்.  எனவே அவரை இடையிலே இறக்கிவிடும் நிலை ஏற்பட்டது' என விமான நிலைய பேச்சாளரான ஜோ மைக்பிரைட் தெரிவித்தார்.

விசாரணைகளின் பின்னர் குறித்த பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .