2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஒரு மில்லியன் பெறுமதியான தங்க முட்டை திருட்டு

Kogilavani   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுமார், ஒரு மில்லியன் பெறுமதியுடைய தங்க முட்டை திருடப்பட்ட சம்பவமொன்று சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

பேபேர்க் என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த முட்டையானது முற்றுமுழுதாக இரத்தினக்கற்கள் மற்றும் வைரங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 1.3 மில்லியன் பெறுமதியுடைய இந்த முட்டையில் நூற்றுக்கணக்கான இரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

மேற்படி நிறுவனத்தில்; முட்டை வைக்கப்பட்டிருந்தபோது அம் முட்டையை மூவர் திருடிசென்றுள்ளனர்.

பின்னர் முட்டை திருடப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டபோது, சுவிஸின்; எல்லைப் பகுதியில் வைத்து சந்தேகத்திற்கிடமாக சென்ற காரொன்றை மறித்த பொலிஸார் அதில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, தங்க முட்டை கிடைத்ததுடன் காரில் பயணித்த மூன்று இளைஞர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஆயுதங்கள் வைத்திருந்தமை, திருட்டு நடவடிக்கை போன்ற குற்றச்சாட்டுக்கள் மேற்படி இளைஞர்கள் மீது பதியப்பட்டுள்ளன.

குறித்த இளைஞர்கள் ஏற்கனவே பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .