2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஐசிங் கேக்கில் இராஜிநாமா கடிதம்

Kogilavani   / 2013 ஏப்ரல் 17 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


அலுவலகத்திலிருந்து விலகும்  தருணம் இனிப்பாக அமையவேண்டும் என்பதற்காக நபர் ஒருவர் தனது இராஜிநாமா கடிதத்தை ஐசிங் கேக்கில் எழுதிக்கொடுத்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த கிரிஸ் ஹோல்மஸ் (வயது 31) என்ற நபரே இவ்வாறு தனது இராஜிநாமா கடிதத்தை கேக்கில் வடிவமைத்துகொடுத்துள்ளார்.

லண்டன், ஸ்டேன்ஸ்டட் விமான நிலையத்தில் தொழில் புரியும் இந்நபர் தான் வடிவமைத்த விசேட இராஜிநாமா கடிதத்தை புகைப்படமெடுத்து அதனை இணையத்தளத்திலும் வெளியிட்டுள்ளார்.

தனது தொழிலை இராஜிநாமா செய்துவிட்டு வெதுப்பகம் ஒன்றை அமைக்கப்போவதாக அந்நபர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'நான் இந்த கேக்கை எனது பிரதி முகாமையாளருக்காக வடிவமைத்தேன். அவர் இந்த கேக்கை பார்த்தவுடன் மிகவும் ஆச்சர்யமடைந்திருப்பார் என்று நம்புகிறேன்' என கிரிஸ் ஹோல்மஸ் தெரிவித்துள்ளார்.

அந்த இராஜினாமா கடிதம் ஒரு கட்டுரையை போல் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான் விலகும் தருணம் ஒவ்வொருவரது உதடுகளும் இனிப்பை ருசித்திருக்க வேண்டுமென நான் நம்புகிறேன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .