2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நாய், சிங்கம், புலியின் கூட்டணி

Kogilavani   / 2013 ஏப்ரல் 03 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாய்க் குட்டி, சிங்கக்குட்டி, புலிக்குட்டி ஆகிய மூன்று ஒற்றுமையாக ஒரே இடத்தில் தமது பொழுதை கழித்து வரும் விநோத சம்பவம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்று வருகிறது.

தென்னாபிரிக்கா, போர்ட் எலிசபெத்தில் உள்ள விலங்கு பண்ணையொன்றிலே மேற்படி மூன்று விலங்குகளும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றன.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் கால்நடை பெண் வைத்தியரான லாஸ்மி (வயது 26) என்பவரின் முயற்சியால் மேற்படி மூன்று விலங்குகளும் ஒற்றுமையாக ஒரே இடத்தில் தமது பொழுதை கழித் வருகின்றன.

இவ்விலங்குகளில் ஹியூகோ என்று அழைக்கப்படும்  நாய்க் குட்டியையே லாஸ்மி முதலில் வளர்த்து வந்தார். நாளடைவில் சிங்கக்குட்டியையும் புலிக்குட்டியை குறித்த நாயுடன் சேர்த்து வளர்க்க தொடங்கிவிட்டார்.

புலிக் குட்டிக்கும் சிங்கக் குட்டிக்கும் பாதுகாவலனாக ஹியுகோ விளங்கி வருவதுடன் அவற்றுக்கு பல்வேறு வேலைகளை கற்றுகொடுக்கும் ஆசானாகவும் ஹியுகா காணப்படுகின்றது.

சிங்கமும், புலியும் சண்டை போட்டால் இடையில் புகுந்து அமைதிப்படுத்துவது, உண்ணும்போது சண்டை போடாமல் பார்த்துக் கொள்வது, அவர்களுடன் விளையாடுவது என ஹியுகா பல பொறுப்பான வேலைகளை முன்னின்று செய்து வருகின்றது.

'முதலில் சிங்கக் குட்டியும், புலிக்குட்டியும் இங்கு வந்தபோது மிகவும் குட்டியாக இருந்தன. இதனால் ஹியூகோவுடன் அவை விளையாடவதற்கு அச்சப்பட்டன. 

ஆனால் நாட்கள் செல்ல செல்ல பயம் தெளிந்து அவை ஹியூகோவுடன் நட்பாகப் பழகத் தொடங்கின. இப்போது என்னை விட ஹியூகோவிடம்தான் அவை ஒட்டி உறவாடுகின்றன' என்று மேற்படி உயிரிணங்களின் கூட்டணி குறித்து லாஸ்மி தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று குட்டிகளுக்கும் நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி என பல பயிற்சிகளை லாஷ்மி வழங்கி வருகிறார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .