2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அரை நிர்வாண படம் பதவிக்கே வில்லங்கமானது

Kogilavani   / 2013 மார்ச் 21 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரியை ஒருவரின் அரை நிர்வாண படங்கள் அவரது தொழிலுக்கு வில்லங்கமாக மாறிய சம்பவம் ஸ்லோவேகியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்லோவேகியாவில் உள்ள ஆரம்ப பாடசலை ஆசிரியர் ஒருவரே இத்தகைய விபரீத நிலையை எதிர்கொண்டுள்ளார்.

மேற்படி ஆசிரியை வீட்டில் ஓய்வு நேரத்தின்போது எடுத்து வைத்த ஆபாசமிக்க புகைப்படங்களை அவரது மாணவர்கள் தற்செயலாக பார்த்ததால் மேற்படி ஆசிரியை பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியை ஆபாச படங்களை மடிக்கணினியில் தொடுத்திருந்ததாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'மாணவர்கள் செயற்திட்டம் ஒன்றிற்காக மேற்படி ஆசிரியையின் மடிக் கணினியை இரவலாக வாங்கி வந்தனர். இம் மடிக்கணினியில் ஒரு பக்கத்தில் அவ் ஆசிரியையின் ஆபாசமிக்க படங்கள் காணப்பட்டன. இதனை பார்த்த மாணவர் ஒருவர் அதனை 5 நிமிடத்தில் பலருக்கு மின்னஞ்சல் செய்துள்ளார்' என மாணவர் ஒருவரின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.

'இவ் ஆசிரியையை இடைநீக்கம் செய்வது நிலுவையில் உள்ளது. இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்புகைப்படங்களானது மாணவர்கள் இவ் வயதில் பார்க்கக்கூடிய புகைப்படங்கள் அல்ல' என உள்ளூர் கல்வி திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .