2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வாசனை திரவியங்களை பூசிகொண்டு பாடசாலைக்கு செல்ல மாணவர்களுக்கு தடை

Kogilavani   / 2013 மார்ச் 21 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடலுக்கான வாசனை திரவியங்களை பூசிகொண்டு மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு பென்சில்வேனியாவிலுள்ள பாடசாலை ஒன்றில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பென்சில்வேனியாவிலுள்ள உயர்தர பாடசாலை  ஒன்றிலே இவ்வாறு மாணவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வாசனை திரவியத்தை உடலிற்கு பூசிகொண்டு சென்ற  மாணவர் ஒருவர் ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டமையினால் இனி பாடசாலைக்கு வரும் மாணவர்கள் இதனை தவிர்த்துகொண்டு வரும்படி பாடசாலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

'வாசானை திரவியமொன்றை உடலில் பூசிகொண்டு வந்த மாணவர் ஒருவர் ஒவ்வாமை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டார்.

அந்த வாசனை திறவியத்தில் எவ்வாறான இரசாயணம் கலந்துள்ளது என்பது தொடர்பில் தெரியவில்லை. இவ்வாறான அசம்பாவிதங்களை தவிர்த்துகொள்ள மாணவர்களை வாசனை திறவியங்களை பூசிகொண்டு பாடசாலைக்கு வரவேண்டாம் என பணித்துள்ளோம்' என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .