2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

உடற்பயிற்சி செய்ததால் ஒவ்வாமைக்கு ஆளான பெண்

Kogilavani   / 2013 மார்ச் 07 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடற்பயிற்சியை மேற்கொள்வதால் தான் ஒவ்வாமை நோய்க்கு ஆளாகுவதாக பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

நான்கு குழந்தைகளின் தாயான கெஸிவ் பீவெர் என்ற 33 வயதுடைய பெண்ணே இவ்வாறு விபரீத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் சாதாரண பெண்களை போன்று உடற்பயிற்சியை மேற்கொள்ளும்போது இவரது இதய துடிப்பின் வீதம் அதிகரிப்பதாகவும் அது மரணத்தை தோற்றுவிப்பதற்கு காரணமாக அமைவதாகவும் தெரிவித்துள்ளார்.

பஸ்ஸுக்காக ஓடுவது அல்லது குழந்தைகளை துரத்தி விளையாடுவது என இவர் நாளாந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார். அதன்பின் இவரது முகம் சிவந்து வீங்கிபோய்விடுகிறதாம். இது ஆபத்தை தோற்றுவிப்பதாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

"சாதார பெண்களைபோன்று நான் இயங்கும்போது எனது கண்கள் வீங்கத் தொடங்குகின்றன. பின்பு நமைச்சல்கள் தொடங்குகின்றன். பின்பு ஐந்து நிமிடங்களின் எனது கண்கள் முழுமையாக மூடிவிடுகின்றன. விசேடமாக நான் குழந்தைகளுடன் நீண்ட  நேரத்தை செலிவிடும்போது இத்தகைய நிலையை எதிர்கொள்கிறேன்.

ஒரு நாள் எனது கணவருடன் பனி சறுக்கலில் ஈடுபடும்போது முதலில் இத்தகைய தாக்குதலை எதிர்கொண்டேன். எனது முகத்தை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு மிகவும் சிரமப்பட்டேன்.

நான் ஒவ்வாமை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை யாரும் நம்பமாட்டார்கள். இதனை கூறும்போது நான் சோம்பேறியென எண்ணுகின்றனர்.

ஆனால் இதுதான் உண்மை. நான் முன்பு விளையாட்டு வீராங்கனையாகவும் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்பவளாகவும் இருந்தேன்.
கேசியா தனது 20 வயதில் இவ்வாறான ஒவ்வாமை நோயினால் முதன்முதலில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .