2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பதின்ம வயது சிறுவனுடன் உடலுறவுகொண்ட 38 வயது பெண்ணுக்கு சிறை

Kogilavani   / 2012 டிசெம்பர் 13 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணமான 38 வயது பெண்ணொருவர் பதின்ம வயது சிறுவனுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததுடன் அச்சிறுவனுடன் உடலுறவுகொண்ட குற்றத்திற்காக 2 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த மேரி ஜேன் என்ற 38 வயது பெண்ணே இவ்வாறு 16 வயது சிறுவனுடன் காதல் கொண்டதுடன் அச்சிறுவனுடன் தகாத முறையிலும் நடந்துகொண்டுள்ளார்.

குறித்த பெண் 18 வருடங்களாக தனது துணைவருடன் வசித்து வந்த நிலையிலேயே கடந்த 6 மாதங்களாக இச்சிறுவனுடனும் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதேவேளை இவ் உறவுமுறை தொடர்பில் தனது நண்பர்களுக்கு கூறி அப் பெண் மகிழ்ந்துள்ளார். நண்பர்களினூடாக இவ்விடயம் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

'மேற்படி சிறுவன் 16 வயதை கடந்தவன் என்பதால் இது ஒரு குற்றமில்லை' என இப்பெண்ணுக்காக வாதாடிய சட்டத்தரணியான கென்னத் பெல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இவர் தனது கணவருடன் வாழ்ந்த நிலையில் குறித்த சிறுவனுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தனது நண்பர்களுக்கு கூறியதாலே இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதின்ம வயது சிறுவனுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியமை, மற்றும் உடலுறவு கொண்டமை போன்ற குற்றங்கள் இப்பெண்மீது சுமத்தப்பட்டுள்ளன.

அப்பெண்ணுக்கு 2 வருட சிறை தண்டனையும் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .