2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நீந்தும் குழந்தைகள்.....

Kogilavani   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிறந்து 9 மாதங்களேயான இரட்டை குழந்தைகள் இருவர் 25 மீற்றர் நீளமுடைய நீச்சல் தடாகத்தில் நீந்தும் காட்சிகளடங்கிய வீடியோவானது பலரை மெய்சிலிர்க்க செய்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த வில்லியம், ஹெலனிடா என்ற இரட்டையர்களே தமது அபார நீச்சல் திறமையை குழந்தை பருவத்திலேயே பறைசாற்றி வருகின்றனர்.

மேற்படி குழந்தைகளின் தாயான கெரோலிடி (வயது 35), மற்றும் தந்தையான விக்டர் இருவரும் இக்குழந்தைகளின் அபரா திறமை வளர்ப்பதற்கு பல பிரயத்தனங்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விடுமுறைக்காக துருக்கிக்கு சென்ற மேற்படி ஜோடியானது அங்கு நீச்சல் தடாகத்தில் இக்குழந்தைகளையும் வைத்துக்கொண்டு நீந்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இதன்போதே தமது குழந்தைகளுக்கும் நீந்தும் திறமையை குழந்தை பருவத்திலேயே இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

பின்னர் விடுமுறை முடிந்து பிரிட்டனுக்கு திரும்பிய மேற்படி ஜோடி உள்ளூரில் உள்ள குழந்தைகளுக்கான நீச்சல் தடாகத்தில் தமது குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.

'குழந்தைகள் முதலில்  5 மீற்றர் தூரத்தையே நீந்தினர். பின்பு 7  மீற்றர்,  பின் 12 மீற்றராக தமது நீச்சல் தூரத்தை  அதிகரித்துக்கொண்டனர்'  என கெரோலிடி தெரிவித்துள்ளார்.





You May Also Like

  Comments - 0

  • vaasavan Wednesday, 12 December 2012 02:28 AM

    சாதிக்கத் தயார் வாங்க போட்டிக்கு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .