2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'நிர்வாணத்தின் உண்மை' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது

Kogilavani   / 2012 நவம்பர் 28 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


'நிர்வாணத்தின் உண்மை'  என்ற தொனிப்பொருளில் எயிட்ஸ் விழிப்புணர்வு செயற்பாடுகளுக்கு செலவிடும் தொகையை அதிகரிக்குமாறு கோரி நிர்வாணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஆதரவாளர்கள் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

எயிட்ஸ் நோய் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆதரவாளர்களே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி பெண்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் நால்வரும் இணைந்துகொண்டுள்ளனர்.

இவர்கள் தங்களது உடல்களில ''AIDS cuts kill' என்ற வாசகங்களை எழுதிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இளம் தலைமுறை ஆண்களுக்கிடையில் எயிட்ஸ் பரவி வருவதாக அமெரிக்க சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார அறிக்கையினை தொடர்ந்து இவ் ஆர்ப்பாட்டத்தினை மேற்படி பெண்கள் முன்னெடுத்துள்ளனர்.

ஆபத்தான பாலியல் உறவு மற்றும் எச்.ஐ.வி தொற்று தொடர்பிலான விழிப்புணர்வு படிப்பினைகளை புறக்கணிக்கும் இளைஞர்களுக்கு இடையில் எச்.ஐ.வியானது பரவி வருவதாக அமெரிக்க சுகாதார திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவருடமும் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 50000 இற்கும் குறயைவில்லையென அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 12,000 பேர் பதின்ம வயது சிறுவர்களாகவும் இளைஞர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களில் அதிகமான இளைஞர்கள் எச்.ஐ.வி சோதனைகளை செய்துகொள்ளவதில்லை என ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி பெண்களை போன்று  டசன் கணக்கிலான ஆரவலர்கள் இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 'எயிட்ஸின் தாக்கத்தில் மக்கள்' என இவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .