2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பொலிஸ் விரட்டியதால் நிர்வாணமான சைக்கிள் காரன்

Kogilavani   / 2012 நவம்பர் 05 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேக கட்டுப்பாட்டை மீறி சைக்கிளை செலுத்திய ஒருவரை கைது செய்ய சென்ற பொலிஸார் அவரை நிர்வாணமாக கைது செய்த சம்பவமொன்று போலந்தில் இடம்பெற்றுள்ளது.

போலந்தின் வடபகுதியை சேர்ந்த பியட்ரோ செமில்விஸ்கி என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரால் கைது செய்யப்படும்போது இந்த நபர் காற்சட்டையை தலையில் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நபர் வேக கட்டுப்பாட்டை மீறி சைக்கிளை செலுத்தியக்காட்சிகள் போலந்தின் பியர் போல் பகுதி நகர கமராவில் பதிவாகியுள்ளது.

மணித்தியாலத்திற்கு 30 மைல் வேகத்தில் சைக்கிளை செலுத்த வேண்டிய போதிலும் வேக கட்டுப்பாட்டையும் மீறி இந்நபர் சென்றுள்ளார்.

அவ்விடத்தில் பொருத்தப்பட்டிருந்த  கமராவில் இவர் ஆடைகளுடன் காணப்பட்டமை பதிவாகியுள்ளது.ஆனால் பொலிஸார் இவரை கைது செய்யும்போது காற்சட்டையை தலையில் அணிந்தவாறு நிர்வாணமாக காணப்பட்டுள்ளார்.

வேக கட்டுப்பாட்டை மீறி சைக்கிளை செலுத்தியது மற்றும் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துக்கொண்டது போன்ற இருக்குற்றச்சாட்டுக்கள் இவர் மீது பதியப்பட்டுள்ளன என உள்ளூர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேற்படி குற்றங்களுக்காக அவர் இலங்கை ரூபாவின் பிரகாரம் 41,727  யை அபராதமாக செலுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .