2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கவர்ச்சி அழகிகளை வைத்து சவப்பெட்டிக்கு விளம்பரம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 04 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவர்ச்சிகரமான அழகிகள் சவப்பெட்டிகளுடன் போஸ்கொடுக்கும் படங்களை எடுத்து அதனை நாட்காட்டியாக தயாரித்த போலாந்து நிறுவனம் ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்த நிறுவனத்தின் இந்த விளம்பர உத்திக்கு போலாந்து கிறிஸ்தவ தேவாலயங்கள் கண்டம் தெரிவித்துள்ளன.

போலாந்தைச் சேர்ந்த லின்ட்னர் என்;ற நிறுவனமே சவப்பெட்டி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. தனது தயாரிப்பு சவப்பெட்டிகளுக்கு விளம்பரம் தேட அது நாட்காட்டி தயாரித்துள்ளது.

2013ஆம் ஆண்டு நாட்காட்டியை அது வித்தியாசமாக தயாரித்துள்ளது.

அதாவது கவர்ச்சிகரமான அழகிகள் சவப்பெட்டிகளுடன் போஸ்தருவது போன்ற படங்கள் இந்த நாட்காட்டியில் காணப்படுகின்றன.

அரைநிர்வாண, முக்கால் நிர்வாண கோலங்களில் கவர்ச்சிகரமான அழகிகள் போஸ்கொடுத்துள்ளனர். சிலர் ஜேர்மனி நாட்டு ஆயில் பெயிண்டிங் முறைப்படி உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் போஸ்கொடுத்துள்ளனர். இதுவே அங்குசர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது பொருத்தமற்ற செயல் என்று கிறிஸ்தவ அமைப்புகளும் தேவாலயங்களும் கண்டித்துள்ளன. மரணம் என்பது புனிதமானது. அதில் செக்ஸ் கலந்துவிடக் கூடாது.

You May Also Like

  Comments - 0

  • JAN Sunday, 04 November 2012 12:21 PM

    6:70. (நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. ---- அல் குர்ஆன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .